நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததே திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததிலிருந்து அவரது குறிக்கோள் ஆளும் கட்சியான அதிமுகவை எதிர்ப்பது மட்டுமே என்ற கொள்கையுடன் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. எனவே திமுகவுடன் அவர் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் கட்சி ஆரம்பித்து உள்ளார் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதும் அந்த ரகசிய கூட்டணியின் அடிப்படையில் தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வரும் கமலஹாசன் ஒரு முறை கூட திமுகவை விமர்சிக்கவில்லை என்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் தேர்தல் நேரத்தில் கமல் திமுகவையும் விமர்சிப்பார் என்றும் இந்த குற்றச்சாட்டு முகாந்திரம் இல்லாதது என்றும் கமல் கட்சியினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்