தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே படங்கல் வெளியிடுவதில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் 10ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரொனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் திரையரங்க உரிமையாளர்களுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதால் புதிய படங்கள் வெளியிடுவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
விரைவில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டபடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 10ம் தேதி திரையரங்குகளை திறக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் முற்று பெறும் வரை தங்கள் கைவசம் உள்ள கடந்த ஆண்டில் அதற்கு முன்னதாக வெளியான சமீப படங்களை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.