Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 - அமைச்சர் அறிவிப்பு

Advertiesment
போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 - அமைச்சர் அறிவிப்பு
, புதன், 24 பிப்ரவரி 2021 (21:18 IST)
போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியது.

இதையடுத்து, வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு செய்துள்ளனர். எந்தவித மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் வேலைநிறுத்தம் நிச்சயமாக நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் . முதல்வர் உத்தரவின் பேரில் இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் முலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும் எனவும், நாளை தமிழகத்தில் அனைத்துப் பேருந்து இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி