Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி

Advertiesment
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு  கமல்ஹாசன்  கேள்வி
, புதன், 24 பிப்ரவரி 2021 (20:55 IST)
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.65000 கடன் சுமை இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தரவேண்டுமென நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகக சட்டசபையில் நேற்று நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மாநிலத்தின் மொத்தக் கடன் தொகை சுமார் ரூ.5.7 லட்சம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் மற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே,  ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்?  இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்திருப்போர் பட்டியலில் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்: தமிழக அரசு உத்தரவு!