தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையிலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மிதமான மழையாக தொடங்கி, முற்பகல் முதல் கனமழையாக அதிகரித்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வருமா என்று பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்த்தனர். எனினும், விடுமுறை அறிவிப்பு வெளியாகாததால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இந்த சூழலில், மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதால், மாலையில் மாணவர்கள் வீடு திரும்பும்போது சிரமங்களை சந்திப்பதை தவிர்க்க, பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் நிலைமையை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அரைநாள் விடுமுறையால் அலுவலகம் செல்வோர் குழந்தைகளை உடனடியாக அழைத்து வருவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால், விடுமுறை அறிவிப்பு வருவது சந்தேகமே என்ற கருத்தும் நிலவுகிறது.