Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி; கமல்ஹாசன்

Advertiesment
படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி; கமல்ஹாசன்

Arun Prasath

, வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:18 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.

10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பின் போது விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வைரமுத்து, தனுஷ், மாரி செல்வராஜ், சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்..