ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான கிம், கோவை ரயில் நிலையப்பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிம், தான் எளிமையாக வாழ ஆசைபட்டதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள தியான மையத்தில் தங்கிருந்தார். பின்பு சில காலம் கழித்து அங்கிருந்து வெளிவந்த கிம், கோவை ரயில் நிலைய பகுதிகளில் உள்ள கடைவிதிகளில் மக்களிடம் பிச்சை எடுத்து உண்டு வருகிறார்.
மனநிம்மதிக்காக யாசகம் பெற்று, அந்த பணத்தில் வாழ்ந்து வருவதாக கிம் கூறுகிறார். மக்களும் அவருக்கு பிச்சையாக பணத்தை கொடுத்துவிட்டு ஆச்சரியமாக பார்க்கின்றனர். பணம் கொடுப்பவர்களை கிம் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்.