Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 விபத்து - நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்க வேண்டியது என்ன?

இந்தியன் 2 விபத்து - நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்க வேண்டியது என்ன?
, வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:02 IST)
இந்திய 2 படபிடிப்பில் நடந்த விபத்து குறித்து  தயாரிப்பாளரும், நடிகருமான வெங்கட் சுபா ஒரு பதிவை போட்டுள்ளார். 
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர க்ரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.  
 
மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திக்கு நடிகர் கமல் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துள்ளார். 
webdunia
இந்நிலையில் பலியான துணை இயக்குனர் கிருஷ்ணா கார்ட்டூனிஸ்ட் மதனின் மாப்பிள்ளை. எனவே, மதனின் உறவினரும், தயாரிப்பாளரும், நடிகருமான வெங்கட் சுபா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அது பின்வருமாறு... 
 
க்ரேன் கொண்டு தளத்தை ஒளிரச்செய்ய பயன்படுத்துவது வழக்கம் இந்த கிரேனை ஓட்டியவர்தான் முதல் குற்றவாளி என ஒரு தகவல். வழக்கமான அனுபவமிக்க ஓட்டுனர் இல்லாமல் ஓரளவு புதிய ஓட்டுனர் ஓட்டியதாகத் தெரிகிறது. அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன் பேலன்ஸ் தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக விழுந்து விட்டது என நம்பத் தகுந்த யூனிட் நண்பர்கள் மூலம் தகவல்.
webdunia
ஈவிபி எனும் அந்த படப்பிடிப்பு தளத்தில் சமீப காலத்தில் இது இரண்டாவது விபத்து. பிகில் படத்திலும் இதே போல உயர்த்தில் இருந்து அதிக எடை உள்ள விளக்கு  விழுந்து சில உயிர்களை பல வாங்கியது தெரிந்ததே, அங்கு மண் பலமாக இல்லையோ என சந்தேகமும் உண்டு. இதே இடம் பொழுது போக்கு பூங்காவாக இருந்த போது பெரிய சைஸ் ராட்டினம் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டது. 
 
பொதுவாகவே படப்பிடிப்புக்கு என உருவாக்கப்படும் அரங்கங்கள் பாதுகாப்பு விஷயங்களில் உத்தரவாதமில்லாதவை. அதில் லைட் ஆபீசர்களும், ஸ்டண்ட் வீரர்களும் எடுக்கும் ரிஸ்க் எப்போதுமே அதிகம்தான்
 
இந்த விபத்து மிகவும் துரதிருஷ்டமானது. யாரையும் பழி சொல்ல அல்ல இந்த பதிவு. ஆனால் இதற்குப் பிறகும் கவனக்குறைவு, தூங்க நேரம் இன்றி தொடர் வேலைகள் உயர் மன அழுத்த வேலைகள், சரியான காப்பீடு திட்டங்கள் இன்றி திரைத்துறை தொடர்ந்தால் சொந்த சூனியம் வைத்துக்கொண்டு நொந்து போகும் முட்டாள் கூட்டம் என்றே பெயர் பெறும் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Indian2Accident : திரை பிரபலங்களின் இரங்கல் பதிவு...!