Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் ஐடி ரெய்டு.. கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள்..!

Advertiesment
ஆர்யா

Siva

, புதன், 18 ஜூன் 2025 (08:54 IST)
நடிகர் ஆர்யாவுக்கு சென்னையில் ஐந்து ஹோட்டல்கள் இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் ஐந்து ஹோட்டல்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கு சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்பட ஐந்து இடங்களில் ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஐந்து ஹோட்டல்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
 
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் காரணமாக ஆர்யாவின் ஹோட்டல்கள் மீது சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சோதனை நடத்துவதற்காக கொச்சியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வந்திருப்பதாகவும், அண்ணா நகரில் உள்ள கிளையில் மட்டும் மூன்று வாகனங்களில் அதிகாரிகள் வருகை தந்து உள்ளதாகவும், சில உணவகங்கள் இன்னும் திறக்கப்படாததால் செக்யூரிட்டியுடன் வருமானவரி அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தையின் பீடி பழக்கத்தால் பறிபோன பிஞ்சு உயிர்! ஆவேசமான தாய் செய்த செயல்!