Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிராக்டரில் கஞ்சா கடத்தல்... மதுரையில் மடக்கி பிடித்த போலீஸார்!

Advertiesment
டிராக்டரில்  கஞ்சா கடத்தல்... மதுரையில் மடக்கி பிடித்த போலீஸார்!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (08:21 IST)
மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் டிராக்டரில் வெளிமாநிலத்திலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தியவந்த நபர் கைது 10 KG கஞ்சா, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் டூவிலர் மற்றும் பார்சல் வாகனங்கள் மூலம் வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனிடையே போலீசார் வாகன சோதனையை தீவிரபடுத்தினர். 
 
அப்போது அவ்வழியே வந்த ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்தபோது சாக்கு மூடையில் 10KG கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டை (47) என்பவர் கஞ்சாவை டிராக்டரில் பதுக்கி மதுரைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. கோட்டையை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10KG கஞ்சா, டிராக்டர் மற்றும் ஒரு டுவிலரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அறிவிப்பு: மேலும் சில தளர்வுகளா?