Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவலர்களை தொந்தரவு செய்தால் சும்மா விட முடியாது – மதுரை கிளை நீதிமன்றம்!

Advertiesment
காவலர்களை தொந்தரவு செய்தால் சும்மா விட முடியாது – மதுரை கிளை நீதிமன்றம்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (16:30 IST)
காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடாமல் இருப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் கண்காணித்து வருவதுடன், போக்குவரத்தை கண்காணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாஸ்க் அணியாம், இபாஸ் இல்லாமல் வரும் மக்கள் பலர் போலீஸாரிடம் ஆவேசமாக பேசுவதும், அவமரியாதை செய்வதுமான வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் காவலர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை “காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்துப்படும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக இருக்கப்போவதில்லை” என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானைகளுக்கு கொரொனா ?