Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் பிரச்சாரத்தின்போது மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்: ஏன் தெரியுமா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்: ஏன் தெரியுமா?
, செவ்வாய், 30 மார்ச் 2021 (10:42 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேற்று சென்னையில் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தபோது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக திமுக கூட்டணியை அடுத்து மூன்றாவது கூட்டணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்தார் 
 
அப்போது அவர் பேசியபோது ’காமராஜர் போன்ற பெரிய தலைவர்கள் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து சேவை செய்தார்கள் என்றும் ஆனால் தான் மிகவும் தாமதமாக அரசியலுக்கு வந்திருப்பதாகவும், தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் எங்கள் கட்சியில் நான் வயதானவராக இருந்தாலும் எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும் குறிப்பாக முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் என்றும் அதனால்தான் நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! – பெரியாரிய அமைப்பினர் கைது!