Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1996 தேர்தலில் திமுக வெல்லக் காரணம் நான்தான் – சரத்குமார் பிரச்சாரம்!

Advertiesment
1996 தேர்தலில் திமுக வெல்லக் காரணம் நான்தான் – சரத்குமார் பிரச்சாரம்!
, திங்கள், 29 மார்ச் 2021 (16:39 IST)
1996 தேர்தலில் திமுக – தமாக கூட்டணி வெற்றி பெற தான் மேற்கொண்ட பிரச்சாரம்தான் காரணம் என சரத்குமார் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் இன்று மாலை சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அழகரை ஆதரித்து பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ’1996 தேர்தலில் திமுக – தமாக கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் நான்தான். 40 நாட்கள் அப்போது நான் பிரச்சாரம் செய்தேன். தற்போது புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டி, ஒரே கருத்துடையவர்களோடு கூட்டணி வைத்துள்ளேன். எங்களிடம் பல மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் நீதி மய்யத்தின் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? கௌதமி கேள்வி!