Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வருடங்களுக்குப் பின் முடிந்த அவன் இவன் பிரச்சனை- நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட ஆர்யா!

Advertiesment
10 வருடங்களுக்குப் பின் முடிந்த அவன் இவன் பிரச்சனை- நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட ஆர்யா!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (08:24 IST)
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நடிகர் ஆர்யா மேல் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் என்ற திரைப்படம் உருவானது. அதை பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் ஜி எம் குமார் ஜமீன்தாராக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்காக அவர் சில முறை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனாலும் பின்னர் ஆகவில்லை. அதனால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு ஆர்யாவை மார்ச் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்யா அந்த காட்சியில் நடித்ததற்காக சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதில்லை என்றும் இருந்தும் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜன் மனது புண்பட்ட படியால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்தோடு ஹோலி கொண்டாடிய சன்னி லியோன் - கலர்ஃபுல் போட்டோஸ்!