Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுவிலக்குத்துறை அமைச்சர் தொகுதியிலேயே பார்களே செயல்பட்டது எப்படி !?

karur
, திங்கள், 3 அக்டோபர் 2022 (22:38 IST)
காந்தி ஜெயந்தி என்றால் மது விற்பனையும் கிடையாது ? பாரும் கிடையாது ? ஆனால் கரூர் மாநகரில் அதுவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் தொகுதியிலேயே பார்களே செயல்பட்டது எப்படி !? அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள்.
 
 
தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் காந்தி ஜெயந்தியான  நேற்று  கட்டாயம் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆங்காங்கே அதிரடி ரோந்தும், சோதனைகளும் நடத்தப்பட்ட நிலையில், ஒரு பெண்மணி உள்பட 72 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களிடமிருந்து 500 க்கும் மேற்பட்ட கள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கரூர் மாநகரில் அதுவும் பேருந்து நிலையத்தில் மதுபான கூடங்கள் 3 இயங்கியுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியிலேயே, அதுவும் மாவட்ட செயலாளரான பின்னர் முதன் முதலில் கரூர் வந்த இந்த நாள் திமுக கட்சிக்கு இழுக்கு ஏற்படும் பொருட்டு காவல்துறையினரின் இந்த செயல் தமிழக அளவில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியதோடு, மாவட்ட எஸ்.பி க்கு ஒரு கரும்புள்ளி ஏற்படுத்தும் விதம் கரூர் காவல்துறையினரின் செயல் மிகுந்த வேதனை அளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே குட்கா, கஞ்சா ஆகியவற்றில் சிங்க முகம் எடுத்த எஸ்.பி சுந்தரவதனம், காந்திஜெயந்தி அன்று மதுபான பார்களே நடத்திய கில்லாடி போலீஸார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்களும் சமூக நல ஆர்வலர்களும்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ துறையில் ஸ்வாந்தே பாபோவுக்கு நோபல் பரிசு நியாண்டர்தால்களை ஆய்வு செய்தவர்