சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய க்ரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும் என்றும், அதேபோல், வரும் 9 ஆம் தேதி இறைதூதர் முகமது நபி அவர்களின் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி அன்று டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.