புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மின் வாரியம் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் நடத்திய சுமார் 500 மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாகவும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று புதுவை அரசு எச்சரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி உடன் மின்வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து புதுச்சேரி மின்வாரிய ஊழியர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்றே பணிக்கு திரும்புவதாக ஊழியர்கள் முதலமைச்சரிடம் உறுதி அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.