கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

Siva
புதன், 3 டிசம்பர் 2025 (08:30 IST)
டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து நேற்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
 
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
 
அதேபோல் விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
 
அதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அண்ணா பல்கலைக்கழக மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments