'டிட்வா' புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக, வட தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் நீடிக்கும் இந்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.