இந்தி மொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! என பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தருவோம் என மத்திய அமைச்சர் கூறிய நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக நேற்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்திய அளவில் கவனம் பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்தி மொழி எதிர்த்து குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், சற்றுமுன் பாரதிதாசன் பாடலை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவு இதோ:
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?