Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

Advertiesment
Realme P3 Pro

Prasanth Karthick

, புதன், 19 பிப்ரவரி 2025 (11:46 IST)

ரியல்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான Realme P3 Pro மற்றும் Realme P3x 5G ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன.

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ரியல்மி நிறுவனமும் ஒன்று. பல்வேறு விலைகளில், வசதிகளில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ரியல்மி நிறுவனம் தற்போது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G ஆகிய இரண்டு மாடல்களில் 5 வகையான வேரியண்ட்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

 

Realme P3 Pro சிறப்பம்சங்கள்:

 

6.83 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி

ஆண்ட்ராய்டு 14

8 ஜிபி / 12 ஜிபி ரேம்

128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 எம்பி OIS + 2 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா

16 எம்பி செல்பி கேமரா

6000 mAh பேட்டரி, 80 W பாஸ்ட் சார்ஜிங்

 

இந்த Realme P3 Pro ஸ்மார்ட்போன் Nebula Glow, Galaxy Purple, Saturn Brown ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை வங்கி சலுகைகள் உட்பட 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.21,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.22,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.24,999 ஆகவும் உள்ளது.

 

Realme P3x 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

 

6.72 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமென்சிட்டி 6400 எஸ்ஓசி

ஆண்ட்ராய்டு 14

6 ஜிபி / 8 ஜிபி ரேம்

128 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 எம்பி + 2 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா

8 எம்பி செல்பி கேமரா

6000 mAh பேட்டரி, 45 W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்

 

இந்த Realme P3x 5G ஸ்மார்ட்போன் Luna Silver, Midnight Blue, Silver Pink ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை வங்கி சலுகைகள் உட்பட 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.13,999 ஆகவும் உள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்