பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன் டிராபி தொடங்க இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது.
இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவிலும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முதல் போட்டிக்கு முன்னாள் கோலாகலமாக நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கின்றன. வானவேடிக்கைகள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.