இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

Bala
புதன், 26 நவம்பர் 2025 (14:49 IST)
டியூட் படத்தில் அமைந்த கருத்த மச்சான் மற்றும்  நூறு வருஷம் போன்ற பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இளையராஜா கோரிக்கை விடுத்தார். கடந்த தீபாவளி ரிலீஸாக மூன்று படங்கள் ரிலீஸானது. டியூட் , பைசன், மற்றும் டீசல் போன்ற படங்கள். அதில் டியூட் மற்றும் பைசன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளசுகளை கவர்ந்த படமாக டியூட் படம் அமைந்தது.

அந்தப் படத்தில் தன் அனுமதியின்றி இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா எப்பொழுதும் போல உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் அந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும். பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
 
ஆனால் இளையராஜா தரப்பில் இருந்து தன் அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறார்கள். பாடலை உருமாற்றி உள்ளனர். அந்த பாடலுக்கான உரிமை தன்னிடம் இருக்கிறது. எக்கோ நிறுவனம் தன் பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்கவேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
 
ஆனால் அந்த பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் வாங்கியதாகவும் சோனி நிறுவனத்திடமிருந்து டியூட் பட நிறுவனம் அனுமதி பெற்று பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த வழக்கு விசாரணையின் போது, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை கேட்டு இப்போது ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார். படம் தியேட்டரிலும் ஒடிடியிலும் வெளியான போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது வந்து வழக்கு தொடர்ந்தது ஏன்? டியூட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கருத்த  மச்சான், நூறு வருஷம் ஆகிய 2 பாடல்களை நீக்க கோரிய இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments