Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளாடும் போதையில் வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர்...

தள்ளாடும் போதையில் வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர்...
, வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:40 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் நீர்த்தெம்பை.  இங்கு மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்குள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் பலநூறு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் மனோகரன்.
தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மனோகரன் மது அருந்திவிட்டு வகுப்புக்கு எதிரிலேயே போதையில் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருக்கிறார்.
webdunia
வகுப்பில் உள்ள மேஜையில் மது பாட்டில்,. தீனி, சாதம் குழம்பு, போன்றவை இருக்கின்றன. மாணவர்களுக்கு படிப்பு சொல்லித்தரும் ஆசிரியரே இவ்விதம்  இருந்தால் மானவர்களின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்விதான் இப்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
webdunia

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசிற்கும் ராணுவத்திற்கும் ஆதரவு – அரசியல் தவிர்த்த ராகுல் காந்தி !