முறையான உரிமம் இல்லாமல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பெண்கள் விடுதிக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் குளியறையில் ரகசியக் கேமராக்கள் கடந்த டிசம்பர் மாதம் கண்டு பிடிக்கப்பட்டன. அது சம்மந்தமான விசாரணையில் விடுதியின் உரிமையாளர்தான் இந்த செயலில் ஈடுபட்டார் எனக் கண்டுபிடித்த போலிஸார் அவரைக் கைது செய்தனர்.
அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் விடுதிகளுக்குப் பத்து புதிய விதிமுறைகளை உருவாக்கி அதைக்கட்டாயமாக அனைத்து விடுதிகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இது சம்மந்தமாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதிகளில் பல முறையான உரிமம் பெறாமல் நடந்து கொண்டிருப்பதாகக் குற்ற்சாட்டு எழுப்பப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘அனுமதியின்றிச் செயல்படும் அனைத்துப் பெண்கள் விடுதியையும் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு மூடிவிட வேண்டும் என்றும் முறையான வசதிகள் உள்ள விடுதிகளுக்கு தமிழக அரசு பிரபவரி 28 ஆம் தேதிக்குள் தமிழக அரசு சான்றளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.