Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி டிஸ்மிஸ்: பாஜக பிரமுகர் மிரட்டல்

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி டிஸ்மிஸ்: பாஜக பிரமுகர் மிரட்டல்
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:30 IST)
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி டிஸ்மிஸ்
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று சில மாநில முதல்வர்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீர்மானங்களால் சிஏஏ சட்டத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் இந்த சட்டம் அமல் படுத்துவது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட ஒரு சில அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்ற பகுதியில் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவான கூட்டமொன்றில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது ’சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்றும், இதைத்தான் முகஸ்டாலின் விரும்புகிறார் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு