”தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தருமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என பிரேமலதா கூறிய நிலையில் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
	
	
	வருகிற மார்ச் 26 ஆம் தேதி, தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே ”தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படுமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவி தருவது குறித்து தலைமைக் கழகமே முடிவு செய்யும். எம்.பி.பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் முடிவெடுப்பது அதிமுக தலைமைதான்” என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.