டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் போராடி வந்த நிலையில் திடீரென சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாளர்கள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை மூண்டது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வன்முறை காரணமாக ரத்தன்லால் என்ற காவலர் உள்பட 5 காவல்துறையினர் உள்பட மொத்தம் 21 பேர் பலியாயினர் என நேற்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை இன்று 27 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஆனால் நேற்று நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுக்கு பின் காவல்துறை சீரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதனால் தற்போது டெல்லி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கடந்த சில மணி நேரமாக டெல்லியில் வன்முறை நிகழ்வுகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது
ஒரு பக்கம் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வன்முறைக்கு யார் காரணம் என பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் செய்து வருவது டெல்லி மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. வன்முறையிலும் அரசியல் தேவையா? என இரு கட்சிகளிடமும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ’கலவரத்துக்கு காரணமான்வர்கள் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லி தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.