Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி.மு.க. அரசுக்கு 'சொம்பு அடிப்பதை' தவிர திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை: எச் ராஜா விமர்சனம்

Advertiesment
எச். ராஜா

Siva

, ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (08:45 IST)
பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆளும் தி.மு.க.வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, அவர்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
 
தி.மு.க. அரசுக்கு 'சொம்பு அடிப்பதை' தவிர திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை என்றும், அவர் "அறிவாலயத்தின் எடுபிடி" போல் செயல்படுவதாகவும் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சித்தார்.
 
மேலும் "விழுப்புரம் மற்றும் சிதம்பரம் சீட் வாங்குவதற்காகவே அவர் கட்சியை நடத்துகிறார்," என்றும் பட்டியலின மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
 
மேலும்,  கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், கரூரில் குறுகிய இடம் ஒதுக்கப்பட்டது ஏன், இது விபத்தா அல்லது வேறு பின்னணி இருக்கிறதா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 
புதுக்கோட்டை வேங்கைவயலில் மலத்தை கலந்த நபர்களை கண்டுபிடிக்க முடியாதது, தி.மு.க. அரசின் தகுதியற்ற தன்மையை காட்டுகிறது என்றும் எச். ராஜா குற்றம் சாட்டினார்.
 
கரூர் சம்பவத்தில் விஜய் தாமதமாக வந்தது குற்றமில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் விவகாரத்தில் தவெகவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி.. உச்சநீதிமன்றம் செல்ல விஜய் முடிவா?