தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணியின் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள இல்லத்தில், சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள் இன்று மதியம் முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு மற்றும் வரி விலக்கு மோசடிகள் குறித்து விசாரிக்கும் மத்திய அரசு துறையான ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவை சேர்ந்த நான்கு அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
அப்போது இந்திராணியின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.