Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:02 IST)
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

இந்த குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.  

இந்த நிலையில் குரூப் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1.ஒருங்கிணைந்தகுடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA(தொகுதி-II/IIA)-இற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 2105-2022 அன்று நடைபெற்றது. 

2. இதற்கிடையே மகளிருக்கான ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனைதொடர்பாக பல்வேறுகட்ட நடைமுறைப்படுத்துவது கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
3. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4. இது தொடர்பாக செய்தி/சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை (www.tnpsc.gov.in) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.’’எனத் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்: ரிஷி சுனக்