Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகையின் தாய் மீது சைக்கிளை மோதிய சிறுவன்: மாநில அரசுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

Advertiesment
court
, திங்கள், 24 அக்டோபர் 2022 (14:35 IST)
நடிகையின் தாய் மீது சிறுவன் ஒருவர் சைக்கிளில் மோதியதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் அபராதம் விதித்துள்ளது 
 
மும்பையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகை ஒருவரின் தாய் மீது மோதினார். இதனால் அவர் காயம் அடைந்தார் 
 
இதனை அடுத்து சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒன்பது வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது.
 
இதனை அடுத்து மகாராஷ்டிர மாநில அரசுக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை சிறுவனின் தாயாருக்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
9 வயது சிறுவன் சிறிய தவறு செய்தால் அதை அறிவுரையாக கூற வேண்டுமே தவிர வழக்கு பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார்: முதல்வர் கண்டனம்