நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்த சம்பவத்தை கையில் எடுத்த திமுகவினர் இதற்கு முழு பொறுப்பு விஜய்தான். அவர் தாமதமாக வந்ததே காரணம். அதோடு மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கும்போது இவர் அங்கிருந்து ஓடி போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் மக்களை சந்திக்கவே இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதலும் சொல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் என்றெல்லாம் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் இதே கருத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தவெக கட்சியின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவர் அர்ஜுன்னா கலைஞர் கைது செய்யப்பட்டபோது அவரின் மகன் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தது தெரியவில்லையா?.. நீங்கள் எங்கள் தலைவரை விமர்சிக்கிறீர்களா? என்று காட்டமாக பேசினார். இதுதான் இப்போது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஸ்டாலின் தலைமறைவாகவில்லை என திமுகவினரும், அவர் தலைமறைவாகத்தான் இருந்தார் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகை ஆர்கே ராதாகிருஷ்ணன் ஆதவ் அர்ஜுனா சொன்னது உண்மைதான் என்றாலும் அதற்கு பின்னணியில் முக்கிய காரணம் இருந்தது. ஸ்டாலின் ஒன்றும் இவர்களைப் போல ஒரு மாதம் தொடர்பு கொள்ளவே முடியாதபடி தலைமறைவாகவில்லை. அவர் பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்தார். தனிப்பட்ட முறையில் என்னிடமும் பேசிக்கொண்டிருந்தார். கட்சிக்காரர்களுடனும் அவர் தொடர்பில்தான் இருந்தார்.
மேம்பால வழக்கில் கலைஞரையும், ஸ்டாலினையும் கைது செய்ய அப்போதையை முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்திருந்தார். கலைஞரை கைது செய்த பின் ஸ்டாலினையும் கைது செய்ய முயன்றார்கள். ஆனால் அவர் அப்போது ஊரில் இல்லை. அப்போது அவர்கள் கையில் சிக்கியிருந்தால் அவரையும் கைது செய்து திமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்குவேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. இதை புரிந்து கொண்டுதான் ஸ்டாலின் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார் என சொல்லி இருக்கிறார்.