Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்மால் 1962-வை மறக்க முடியுமா?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

Advertiesment
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

WD

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (13:34 IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணலை  வழங்கினார். அதன் தொகுப்பை இங்கே காணலாம்.
 
 
கேள்வி 1:
 
திரு ரவி அவர்களே! ஒரு விந்தையான கேள்வியுடன், நமது உரையாடலை தொடங்குகிறேன்.  நீங்கள் இயற்பியலில் முதுகலை பெற்றவர்.  பின்னர் பத்திரிகை தொழிலில் நுழைந்தீர்கள். ஆனால் சரியான சமயத்தில் வெளிவந்து விட்டீர்கள்.  ஒரு வேளை அந்த துறையை தேர்ந்தெடுத்தது தவறு என்று உணர்ந்தீர்களோ தெரியவில்லை. அதன் பின் மத்திய புலனாய்வு துறையில் சேர்ந்து, ஊழல்களுக்கு எதிராக பெரும் போரை நிகழ்த்தினீர்கள். பிறகு உளவுத்துறை பணியில் சேர்ந்தீர்கள் மேலும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக நாகலாந்து போன்ற மாநிலங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டீர்கள்.  நீங்கள் முக்கிய பணிகளில் எல்லாம் ஈடுபட்டு விட்டு தற்போது ஆளுநராக இருக்கிறீர்கள்.? முன்பிருந்த துறைகளின் முக்கியத்துவம் இல்லாத ஆளுநர் பதவி, தங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா? 
 
பதில் 1:
 
நிச்சயம் ! தமிழ் நாடு மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததாக நான் பெரிதும் மகிழ்கிறேன். அதோடு தமிழ் நாட்டின் புராதன, செம்மையான தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் அறிந்து வருகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக,  விருந்தோம்பலுக்கு பெயர்போன, தமிழர்களின் அன்பு, பாசத்தில் திளைத்து உள்ளேன். மிகவும் அருமையான மக்கள் அவர்கள். தமிழகத்திற்கு வந்தது எனது வாழ்க்கையை வளமாக்கும் அனுபவமாக அமைந்திருக்கிறது. பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த பல வருடங்களாக நான் பணியாற்றி உள்ளேன். அந்த வருடங்களில் நான் அனுபவங்களால் வளர்ந்திருக்கிறேன். தமிழகத்திற்கு வந்தது, அந்த அனுபவத்தை  பன்மடங்கு வளர்த்துள்ளது உண்மை! கடந்த 40-50 வருடங்களை  தேச பாதுகாப்பு பணிகளில் என்னையே ஈடுபடுத்தி, பல பிரச்சனைகள் கையாண்டு வந்தேன். 
 
பிரதமர் மோடி என்னிடம் ஆளுநர் பொறுப்பை தந்த போது, நான் உடனடி மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டேன். அவர் மீது எனக்கு அளவற்ற மதிப்பும்,  வியப்பும், அவர் தலைமையின் மீது ஆழமான நம்பிக்கையும் கொண்டவன். நான் இதை குறிப்பிடும்போது, அவர் பிரதமராக பதவி ஏற்றபிறகு எனக்கு அவரிடம் ஏற்பட்ட மரியாதைஇல்லை இது. அதற்கு முன்பே ஏற்பட்ட பிரமிப்பு.  அவர் வாழ்க்கையில் எந்த பதவியும் வகிக்காதபோதே நான் அவரை அறிந்திருக்கிறேன். 1992ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி காஷ்மீர் அப்போது தீவிரவாதத்தால் எரிந்து கொண்டிருந்தது. அப்போது நான் காஷ்மீர் மாநில பாதுகாப்பு பொறுப்பில் இருந்தேன். மக்களின், குறிப்பாக ஹிந்துக்கள் மீது பல்வேறு கொடுமைகள் கட்டவிழ்த்து பட்டு வந்தன. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அந்த பகுதியில் இருந்து விரட்டப்பட்டனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறப்பட்டு இருந்ததை காட்டிலும் இன்னும் கொடுமையான நிகழ்வுகள் நடந்தன.
webdunia


காஷ்மீர் பள்ளத்தாக்கு குறிப்பாக ஸ்ரீநகர் முழுவதும் தீவிரவாதிகள் வலம் வந்தனர். லால் சவுக் என்கிற ஸ்ரீநகர் இதயப்பகுதிக்கு போகவே யாருக்கும் துணிவில்லாமல் இருந்த நேரம் அது.  நமது ராணுவத்தினர், ஆயுதம் பொருத்திய வண்டியில் தான் போக முடியும். காரணம் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை அங்கே நடத்துவது என்பது மிக சிரமமான ஒன்று. இம்மாதிரியான நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புடன் விளையாட்டு அரங்கங்களில் தான் நடத்தப்படும். அந்த சமயத்தில், காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஓடி மறைந்து கொண்டார்கள். டாக்டர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்துடன் லண்டனில் சென்று அடைக்கலம் தேடி  இருந்தார்.

மொத்தத்தில் காஷ்மீரில் யாருமே இல்லை. தீவிரவாதிகளின் வசம் தான் இருந்தது. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் ஒரு இளைஞர் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதிக்கு வந்து மூவர்ண கொடியை ஏற்றினார். மாநில அரசு தங்களால் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று வலியுறுத்தி சொல்லியும், துணிவுடன் வந்து அவர் தேசிய கொடியை ஏற்றினார். ஒரு இளைஞர் அதுவும் என் வயதோ அல்லது என்னை விட ஒன்றோ, இரண்டோ வயது மூத்தவர். அந்த துணிவை கண்டு மெய்சிலிர்த்து போனேன். அந்த நேரத்தில் அவரது உயிரை தீவிரவாதிகள் பறித்திருக்க வெகு நேரம் ஆகி  இருக்காது. ஆனாலும் நாட்டின் புகழுக்காகவும், பெருமைக்காகவும், தன் உயிரை துச்சமென மதித்து தேசிய கொடியை ஏற்றி இருந்தார் அந்த இளைஞர். நான் அவர் யார் என்பதை விசாரித்தேன். பிறகு அவர்தான் நரேந்திர மோடி என்பதை அறிந்தேன். இப்படி ஒருவரா என்று நினைத்த எனது மதிப்பில் அவர் பெரிதும் உயர்ந்து போனார். வெகு காலத்திற்கு பிறகு குஜராத் முதல்வராக வந்து, குஜராத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். 

அந்த விவரங்கள் எல்லாம் நமக்கு தெரியும், பிறகு புதுதில்லி வந்து இப்போது நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.  24 மணி நேரமும், பாரத மாதாவின் புகழை, இந்த நாட்டின் பெருமையை  எப்படி நிலைநாட்டுவது எனபது தவிர வேறு சிந்தனை எதுவும் இல்லை. எனது பலம் மற்றும் பலவீனங்களை அவர் அறிவார். எனவே என்னிடம், இந்த ஆளுநர் பொறுப்பை கொடுத்தார். நான் மகிழ்வுடன் அதனை ஏற்றி கொண்டேன். இன்னும் அந்த மகிழ்ச்சி தொடர்கிறது. அதற்காக மிக நன்றி.
 
கேள்வி 2:
 
சார் !  நாட்டின் மிக உணர்வுபூர்வமான பகுதிகளில் எல்லாம் பணியாற்றி உள்ளீர்கள். குறிப்பாக ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு, குறிப்பாக நாகாலாந்து. உங்கள் வரலாற்றை அறிந்தவர்கள், நீங்கள் தமிழகத்திற்கு ஆளுநராக வருகிறீர்கள் என்றவுடன், புருவங்கள் உயர்ந்தன. நீங்கள் பொறுப்பேற்றபோது தமிழகம் எந்த நிலையில் இருந்தது ? தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதா ?
 
 
பதில் 2:
 
தமிழ் மக்கள் மிகவும் நல்ல மாதிரியாக நட்புடன் பழகுகிறார்கள். நன்கு உபசரிக்கிறார்கள். நல்ல கலாச்சார பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கேயும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. இங்கேயும் தேச விரோத சிந்தனைகளும், தீவிரவாத போக்கும் நிலவுகின்றன. இதை செய்பவர்கள் எந்த வித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் வளைய வருகிறார்கள்.  ஆனால் NIA அவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதை காட்டிலும், தமிழகத்தில் நிலவும் அரசியல் கலாச்சாரம் தான் கவலையை தருகிறது.  தேசத்தின் மற்றைய பகுதிகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறது. இது நல்லதல்ல. 
 
கேள்வி 3:
 
நீங்கள் இதை சொல்லும் போது, உங்கள் பேச்சுகள் பெரும்பாலும் திரிக்கப்படுகின்றன அல்லது, தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. அல்லது தவறாக புரிந்து கொள்ளும்படியாக செய்யப்படுகிறது. இங்கே நீங்கள் தமிழர்களின் எதிர்ப்பாளராக சித்தரிக்கப்படுகிறீர்கள். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ?
 
பதில் 3:
 
இதோ பாருங்கள்! எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. ஏன் அப்படி சித்தரிக்கப்படுகிறேன் என்று. சிலர் அப்படி சொல்கிறார்கள் என்று அறிகிறேன். ஆனால் நான் பயணிக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நொடி கூட, அப்படி ஒரு உணர்வை யாரும் பிரதிபலிக்கவில்லை.  இன்னும் சொல்லப்போனால் மக்கள் என் மீது பொழியும் அன்பிலும், பாசத்திலும் திக்குமுக்காடுகிறேன். நான் தமிழ் எதிர்ப்பாளர் என்றால், அத்தகைய அன்பான வரவேற்பு எனக்கு கிடைக்கும் என்று தோன்றவில்லை. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், ஆகியவை பாரதத்தின் பெருமைகள். தற்போது பேசப்படும் ஒரு பண்டைய மொழி தமிழ். வளமான கலாச்சாரத்தில் திளைத்த மக்கள். எனவே  நான் தமிழ் எதிர்ப்பாளன் என்று சொல்பவர்களுக்கு, தங்கள் பொய் சொல்வதை உணர்த்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்
 
கேள்வி 4:
 
சார், ஒரு மொழியை, ஒரு கலாச்சாரத்தை காக்கின்றோம் என்கிற பெயரில், மற்றொரு கலாச்சாரம், மொழியை வெறுக்க வேண்டிய கட்டாயம் உளள்தா ? இது குறித்து நான் சற்று விரிவாக சொல்ல விழைகிறேன்.  அண்மையில் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ் நாட்டில் பீகார் மாநிலத்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சொன்னார்.  உண்மையிலேயே பீஹாரிகள் இங்கே துன்புறுத்தப்படுகிறார்களா ? நான் தங்களிடம் கேட்க விரும்புவது, இது குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளனவா அல்லது தங்கள் மத்திய அரசுக்கு ஏதேனும் தகவல்களை அளித்துள்ளீரா? இம்மாதிரியான குற்றச்சாட்டுக்கு அடிப்படை என்ன?  
 
பதில் 4: 
 
நீங்கள் ஒரு கேள்வியை கேட்டுளீர்கள். அதற்கு நான் நேர்மையான பதிலை அளிக்க வேண்டும்.  ஆறி வரும் புண்களை நான் மீண்டும் கிளற விரும்பவில்லை. எனினும் 2022ம் ஆண்டு இறுதியிலும், 2023ம் ஆண்டிலும் சில தமிழக மூத்த அமைச்சர்கள், இங்குள்ள பிஹாரி தொழிலாளர்கள் எதிராக பேசிய பேச்சுக்களை மறந்திருக்க முடியாது. பானி பூரி  விற்பவர்கள் என்று அவர்கள் வர்ணிக்கப்பட்டனர். அவர்கள் பானி  பூரி விற்பதற்குத்தானே லாயக்கு என்பது போல கூறினார்கள். ஏப்ரல் 2023ல் அவர்களை தாக்கி மாநிலமெங்கும் நிறைய போஸ்டர்கள் ஓட்டபட்டன. அந்த போஸ்டர்களை நான் பத்திரப்படுத்தி உள்ளேன். பழைய கதையை நான் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒரு கட்சி தலைவரின் புகைப்படத்துடன் வெளிவந்த ஒரு போஸ்டரில், இந்தி பேசுபவர்கள், புலன் பெயர்ந்த தொழிலாளிகள் ஆகியோர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார்கள். அதை தொடர்ந்து பீஹார் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு பெருமளவில் வெளியேற தொடங்கினார்கள். தொழிலாளர்களை சார்ந்து இருக்கும் தொழிற்சாலைகளான, கட்டுமான துறை, ஆடை, பதிப்பு தொழில் போன்றவை பெரிதளவில் பாதிக்கப்பட்டன.  இது எதுவரைக்கும் சென்றது என்றால்,  நான் பயணம் செய்து, அவர்களை சந்தித்து சமாதானம் செய்தேன். கவலைப்படாதீர்கள். தமிழர்கள்  அன்பானவர்கள். வந்தாரை வாழ வைப்பவர்கள் என்றேன். நானே தெருக்களில் ஒட்டப்பட்டு இருந்த அந்த போஸ்டர்களை பார்த்தேன். அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். நான் அவர்களிடம் சொன்னேன், அவற்றில் சிலவற்றை நான் பத்திரப்படுத்தி உள்ளேன். அதை மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். 
 
இது என்ன, இப்படி வெறுப்பு அரசியல்? அச்சுறுத்தும் வகையில் கெடு விதிப்பது? சில புலன் பெயர்ந்த தொழிலார்கள் தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள்.. போலீஸ் அது விஷமிகளின் வேலை என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சொன்னார்கள்.  இன்னும் சொல்ல போனால், மே ஐந்தாம் தேதி, நான் சமூக ஊடகங்கள் மூலமாக  பிஹாரி தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தேன்.  இங்குள்ள மக்களை நல்லவர்கள், வந்தாரை வாழ்விப்பவர்கள், உங்களுக்கு எந்த தொந்தரவையும் அளிக்க மாட்டார்கள் என்று சொன்னேன்.

ஆனால், அந்த தொழிலாளர்கள் இன்னும் அச்சத்தில் இருக்கிறார்கள். பகிரங்க அச்சுறுத்தல் இருப்பதால், அந்த பயம் இன்னும் நீடிக்கிறது. தாக்குதல் சம்பவங்கள் அந்த பயத்தை அதிகரிக்கிறது. கட்டுமான, ஆடை மற்றும் பதிப்பு தொழிற்சாலைகள் இதனால் பாதிக்கப்பட்ட போது, முதலாளிகள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள். நாங்கள் மீண்டும்  நிலைமையை சரி செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் தொழிலாளர்கள் வர தயங்குகிறார்கள் என்று கூறினார்கள். இதனால் மாநில பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பிறகுதான், அரசுக்கு இந்த புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் நமது மாநில பொருளாதாரத்திற்கு தேவை என்பதை உணர்ந்து. மீண்டும் அவர்களை வரவழைக்க பார்க்கிறது. ஆனால் அச்சம் காரணமாக அவர்கள் வர மறுக்கிறார்கள்.

இப்போது நிலைமையை சரி செய்ய சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.  இன்னும் சொல்ல போனால், தமிழர்கள் சிலர் அவர்களை சந்தித்து உங்களுக்கு பிரச்சனை இருக்காது என்று சொல்லி வருகிறார்கள். அவர்களை அச்சுறுத்துவது மக்கள் அல்ல. மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். தமிழ் மக்களுக்கு இந்த தொழிலாளர்களின் அருமை புரிந்திருக்கிறது. ஆனால் மலிவான அரசியல் தான் இதற்கு காரணம். இந்த அப்பாவி பிஹாரிகள், தமிழ் கலாச்சாரத்தை மொழியை அழிக்க வந்திருக்கிறா ர்கள் என்றெல்லாம் பேசி, மக்களிடையே ஒரு கற்பனை பயத்தை உண்டு செய்கிறார்கள். அவர்களிடையே ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறார்கள். இதனால் தொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள். இந்த நிலைக்கு இதுவே காரணம், இதுதான் உண்மை.
 
கேள்வி 5:
 
Sir நான் தங்கள் சாகசம் நிறைந்த வாழ்க்கை கதையை பின்தொடர்ந்து வருகிறேன். உங்கள் வாழ்க்கை சரிதம் முழுவதும், நீண்ட போராட்டங்களும், மற்றும்  சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளும் நிறைந்திருக்கின்றன. தற்போது நாட்டின் மிகவும் உணர்வுபூர்வமான பகுதியின் ஆளுநராக வந்திருக்கிறீர்கள். அதாவது தனது தனித்தன்மையை நிலைநிறுத்த விரும்பும், வடக்கு எதிர்ப்பு, மொழி எதிர்ப்பு அடிப்படையில் அரசியல் நடத்தும் பகுதி. வடக்குக்கு எதிராக குரல் எழும்பும் போதெல்லாம், குறி வைக்கப்படுவது மாநில ஆளுநர் தான். தற்போதும் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தங்களுக்கு எதிராக நிலவும் பிரச்சாரங்களை எல்லாம், எப்படி கையாள போகிறீர்கள் ?
webdunia
 
பதில் 5:
 
நீங்கள் கூறியது போல, இங்கே வடக்கு எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பின் அடிப்படையில் அரசியல் நடத்தப்படுகிறது. ஆனால் நான் முழுவதுமாக அதை ஏற்கவில்லை. மற்ற மாநிலங்களை போல அல்லாமல், தமிழக அரசியலுக்கு ஒரு சிறு அளவு பிராந்தியத்துவம் தேவை தான் என்றாலும்,  அந்த வாதங்கள் நியாய அடிப்படையில் இருக்க முடியாது.  தமிழ் மக்கள், சற்று விதிவிலக்கு என்ற முறையில் தான் இருக்க முடியும். தமிழ் மக்கள், தமிழ்நாடு ஏனைய பகுதிகளை காட்டிலும் சற்று தனித்தன்மை கொண்டது என்கிற அடிப்படையில் இருக்கலாம். தமிழ் இனம் சற்று தனித்தன்மை கொண்டது என்பதால் திராவிடர் என்று ஒரு தனி இனம் என்கிறார்கள். தமிழ் மொழியும், மற்ற மொழிகளுடன் தொடர்பு இல்லாதது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும், ஐரோப்பிய சிந்தனையாளர்களால் விதைக்கப்பட்டது. 

ஜெர்மன் நாஜியின் இன கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்து இது. ஆரிய இனம், ஆரியர் படையெடுப்பு, போன்றவை ஐரோப்பியர்களால்  திணிக்கப்பட்டது. இப்போது ஐரோப்பாவிலும், ஜெர்மனியிலும் யாரும் அதை பற்றி பேசுவதில்லை. இங்கிருக்கும் சிலர்தான் அதை பற்றிக்கொண்டு பேசி கொண்டு இருக்கிறார்கள். இந்த பேச்செல்லாம் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஆரியர் படையெடுப்பு போன்ற வாதங்கள் வெறும் கற்பனை தான். நோக்கத்துடன் புனைபட்ட கற்பனை.  தமிழ் மொழியை பொறுத்தவரை, அவர்களின் கருத்துகள் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் இலக்கணம் குறித்த நூலை அடிப்படையாக கொண்டுள்ளது. அதை வைத்து தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்கள்.

தமிழ் சற்று வேறுபாடு உள்ளது தான். ஆனால் அதை வெறுப்பு பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். வட இந்திய மொழிகள் மட்டும் வெறுக்கப்படவில்லை. திராவிட குடும்பத்தின் மற்ற மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு கூட அவர்களால் குறி வைக்கப்படுகிறது. ஹிந்தி எதிர்ப்பு என்பது இங்கே ஒரு அரசியல் சூழ்ச்சியே. 35 சதவீதம் பேர் இங்கே மொழிரீதியான சிறுபான்மையினராக திகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் தாய் மொழியை இங்கிருக்கும் பள்ளிகளில் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

2022ல் இந்த அரசு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்த வாய்ப்பை மறுத்ததால், அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாதிட்டார்கள். செப்டம்பர் 2023 உச்சநீதி மன்றம் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்க, அதனை எதிர்த்து வாதம் புரிந்தது. ஆனால் உச்சநீதிமன்றம், மொழிரீதியான சிறுபான்மையினருக்கு அரசியல் சட்டப்படி அடிப்படை உரிமைகள் உள்ளன என்று செப்டம்பர் 2023ல் கூறியது. ஹிந்தி எதிர்ப்பை பற்றி பேசும் நேரத்தில், இங்கே தமிழை தவிர எல்லா மொழிகளும்தானே வெறுக்கப்படுகின்றன. மொழிரீதியான சிறுபான்மையினர், தங்கள் வீடுகளை தவிர வெளியே தங்கள் மொழியை பேச அச்சப்படுகின்றனர். மொழி என்று வருகிறபோது தமிழுக்காக வாதிடுபவர்கள், உண்மையில் தமிழை விரும்பிகிறார்கள?  தமிழ் மொழிக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக அதன் மேம்பாட்டுக்காக அவரகள் என்ன செய்தார்கள் ?
 
தமிழ் மொழியை மேம்படுத்த ஏதாவது தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா ? உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா ? தமிழ் மீடியம் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி ஆங்கில பள்ளிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். உயர்கல்வியை தமிழில் கற்பவர்கள் குறைந்து வருகிறார்கள். உங்களுக்கு தெரியுமா? 

1981ல் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது  தஞ்சையில் தமிழ் மேம்பாட்டிற்காக தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தார். தமிழ் கலாச்சாரத்திற்காக அவர் 40வருடங்களுக்கு முன்பு அமைத்த பல்கலைக்கழகம். இன்று அதன் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? அந்த பல்கலைக்கழத்தில் ஆயிரம் மாணவர்கள் கூட இல்லை.  40 வருடங்களுக்கு பிறகு ஆயிரம் மாணவர்கள் கூட இல்லை. தற்போது யூஜிசி சில விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.. அதாவது மத்திய அரசின் நிதி பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பல்கலை கழகங்கள் குறைந்தபட்சம் ஆயிரம் மாணவர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதுதானே அந்த நியதி.

அதனால் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஆயிரம் மாணவர்கள் என்கிற எண்ணிக்கையை காட்ட வேண்டி, சில Phd ஆய்வறிஞர்கள் என்று சிலரை சேர்த்து ஆயிரம் கணக்கை காட்டுகிறார்கள்.  அதன் செயல்பாட்டை பாருங்கள். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின்  ஆசிரியர் எண்ணிக்கை 90. ஆனாலf 50 சதவீத பதவிகள் காலியாக உள்ளன. அந்த பதவிகள் வெகு நாட்களாக நிரப்பப்படவில்லை. ஆய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் போன்ற ஆய்வுகளை  மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மானியம் ஒதுக்கப்படவில்லை.

ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு Fellowship அளிக்கப்படவில்லை. Fellowhip கிடைத்த மாணவர்களையும் மத்திய நிறுவனங்களான, ICSSR, CICT போன்றவைதான் ஆதரிக்கின்றன. அவை தான் நிதி அளிக்கின்றன. தமிழக அரசின் பங்கு இதில் பூஜ்யம் தான். தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், தமிழில் சுமார் 11 லட்சம் பனையோலை சுவடிகள், பாழாகி, நாசமடைந்து வருகின்றன.  மற்ற பல்கலைக்கழங்களை பாருங்கள்.  இதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நிலை. அதை நிறுவியவர் மாபெரும் தலைவர் எம்ஜிஆர் என்பதால், இன்றைய அரசு அந்த பல்கலைக்கழகத்தில் அக்கறை காட்டவில்லை.  நான் அந்த அரசியலுக்குள் போக விரும்பவில்லை.

ஆனால தமிழ் மொழியும், அதன் கலாச்சாரமும் இந்த மாதிரி குறுகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  ஏனைய தமிழ் பல்கலைக்கழகங்களின் நிலையை பாருங்கள்.  மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 20ம் நூற்றாண்டு காலகட்டத்தில் மஹாகவி சுப்ரமணிய பாரதியை காட்டிலும் தமிழ் பெருமைக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர் வேறு  யார் இருக்க முடியும் ? அவர் பெயரில் ஒரு இருக்கை கூட இல்லை. அதை அமைப்பதற்காக கடந்த நான்கு வருடங்களாக போராடி வருகிறேன். எப்போதெல்லாம் நான் பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அமையுங்கள் என்று துணைவேந்தர்களிடம் சொன்னால், உடனே அவர்கள், அதற்கு எதிர்ப்பாக எங்களுக்கு அமைச்சர்களிடம் இருந்து அச்சுறுத்தல் வருகின்றன என்கிறார்கள்.

ஆனால் திராவிட  தலைவர்களின் பெயரில் 15 இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கலைஞர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவர் பெயரில் ஏற்கனவே இரண்டு இருக்கைகள் உள்ளன. மேலும் இரண்டு வர போகின்றன. ஆனால், மஹாகவி சுப்ரமணிய பாரதியின் பெயரில் இருக்கை இல்லை. இது ஒன்று போதாதா? அவர்களது தமிழ் பற்று பற்றி அறிந்து கொள்ள!  இந்த் காலகட்டத்தில் உண்மையாக தமிழுக்கு சேவை செய்வது யார் என்று பாருங்கள். தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் பிரதமர் மோடி செய்யும் பணிகளை காட்டிலும் வேறு யார் செய்கிறார்கள் ? பிரதமர் மோடி தமிழுக்கு அப்படி என்ன செய்து விட்டார் ? நம் CICT (மத்திய செம்மொழி தமிழ் கல்லூரி) பாழடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தை புதிய கலைக்கூடமாக மாற்றினார். பல புதிய வசதிகளை செய்துள்ளார்.

தமிழ் மொழியை தேசத்தில் மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்ல வேண்டி, டெல்லி பல்கலையில் பாரதியார் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.  குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ படிப்பு தொடங்கப்பட்டுளளது. தமிழ் பேசாத பலர் இந்த கோர்ஸ் படிக்கிறார்கள் என்பது தமிழுக்கு பெருமை.  இவையெல்லாம் பிரதமர் மோடியின்  உத்தரவின் பெயரில் நடக்கின்றன.  தமிழ் இலக்கியத்தை, தமிழகத்திற்கு அப்பால், இந்தியாவிற்கு அப்பால் எடுத்து செல்லும் விதமாக, சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்பட்டதோடு, மலேசிய பல்கலைக்கழகம், பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அங்கு பணியாற்றும் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊதியம் தருகிறது.  தமிழ் கலாச்சாரம், செங்கோலின் மகத்துவம் நமக்கு தெரியும். நமது பெருமையை உணர்த்துகிறது செங்கோல். அதிகார மாற்றத்திற்கு முக்கிய குறிப்பேடு செங்கோல். அது முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிரதமர் என்ன செய்தார் ? அதை மீண்டும் கண்டெடுத்தார். ஒரு தனியார் கலைகாட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வாக்கிங் ஸ்டிக் போல கிடந்த செங்கோலை சகல மரியாதைகளுடன் வரவழைத்து, அதை பாராளுமன்ற வளாகத்தில் மீண்டும் வைத்தார். சோழர்களை எடுத்து கொள்ளுங்கள். நமது தேசத்திற்கே பெருமையை தருபவர்கள் சோழர்கள். ராஜராஜசோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலைகளை நிறுவ உள்ளார்கள். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. 

தமிழுக்காக கடந்த நான்கு வருடமாக பேசி கொண்டிருப்பவர்கள், இதுவரையில், அதற்காக ஒரு துரும்பையும் எடுத்து போடவிலை. எதுவும் செய்யப்பட்டதாக நான் கேள்விப்படவில்லை. ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் நினைவாக ஏதாவது செய்யப்பட்டதா ? அவர்கள் ஆன்மிகம் பேசியதால், விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லி அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அப்படி என்றால், தமிழ் கலாச்சாரத்திற்கு என்ன உள்ளது ? தமிழர்கள் சிவபக்தர்கள். எங்கு சென்றாலும் பக்தியில் திளைக்கிறவர்களை நான் பார்க்கிறேன்.

காசியுடன் தமிழகத்திற்கு ஆழமான தொடர்பு உள்ளது. பிரதமர் மோடி, கடந்த நான்கு வருடங்களாக காசி தமிழ் சங்கமம் நடத்தி வருகிறார். எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா ? தமிழ் கலாச்சாரத்திற்கு  புத்துணர்ச்சி ஊட்ட. காசி-தமிழ்நாடு தொடர்பை விரிவுபடுத்த வேண்டி அதை செய்கிறார். எனவே தமிழ்  தமிழ் மேம்பாட்டுக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள், அதன் மூலம் மற்ற கலாச்சாரங்களின் மீது வெறுப்பை தோற்றுவிக்கிறார்கள்.  அவர்கள் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கிறது என்றால், தமிழுக்கு தங்கள் கடமைகளை கூட ஆற்றுவதில்லை.  நமது தமிழ் காப்பகத்தை எடுத்து கொள்ளுங்கள்.

நமது நாட்டிலேயே மிகவும் பெருமை வாய்ந்த காப்பகம் அது.  அந்த காப்பகத்தில் உள்ள ஆவணங்களை digitalaise செய்ய கடந்த நான்கு வருடங்களாக முயன்று வருகிறேன். இப்போதைய நிலை என்ன தெரியுமா ? மூன்று சதவீத ஆவணங்கள் கூட digitalise செய்யப்படவில்லை.  அதற்கு காரணம் வரலாற்றை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. அது அவர்கள் முகத்தை வந்து தாக்கும் என்பதால்.  ஆனால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துள்ளது.  அதனால் ,மற்றவர்களை தமிழ் விரோதிகள் என்று கூறாமல், தங்கள் தங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இம்மாதிரி பிரச்சாரங்கள் வெகுகாலம் நீடிக்காது. 
 
கேள்வி 6:
 
ரவிஜி, நான் சில பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்ப நினைக்கிறேன். தாங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகலாந்து பாதுகாப்பு பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டவர் என்பதால், இந்த கேள்விக்கு பதிலளிக்க தாங்கள் தான் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். ஒரு நாட்டின்மீது தொடுக்கும் போராக பயங்கரவாதம் மாறி விட்டது. பயங்கரவாதம் திடீர் என்று முகத்தை காட்டுகிறது. நமது நுண்துளை என்பதால் ஊடுருவல்கள் நடக்கின்றன.  மேலும் தற்போது போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.? 
 
பதில் 6:
 
உங்கள் கேள்விக்கு பல முக்கியமான முகங்கள் உள்ளன. நமது எல்லையின் நுண்துளையை பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஊடுருவலால் பாதிக்கப்படும் எல்லைகளை பற்றியும் சொன்னீர்கள். இரண்டுமே கவலையளிக்கும் விஷயங்கள்தான். ஊடுருவல்களை  தடுக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த அறுபது வருடங்களாக, அதற்கான எல்லை கட்டுமானங்கள் செய்யப்படவில்லை. மேலும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வடஎல்லை என்கிறபோது திபெத் எல்லை மிகவும் பிரச்னைக்குரிய பகுதியாக திகழ்கிறது. பனிபொழிவால் ஆறு மாதங்கள், வரையில் அங்கே  செல்ல முடியாத நிலை உள்ளது. 

எல்லையில் வாழ்ந்த மக்களையும் கடந்த 60 வருடங்களாக புறக்கணித்து வந்துள்ளோம். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மருத்துவமனைகள், பள்ளிகள், மின்சார வசதி, சாலைகள் எதுவும் தரப்படவில்லை. 2000 வருடம் முதல் 2013 வரையில் அங்கே நான் செல்லும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியுடன்தான் அந்த மக்களை சந்திப்பேன்.  தில்லியிடம் அலைபேசியில் பேச வேண்டும் என்றால் சற்று தூரம் சென்று, சீன network மூலம் தான் என்னால் பேச முடியும். அடிப்படை வசதிகளே இல்லை என்கிறபோது connectivity எங்கே இருக்கும் ? இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள். பாழடைந்துபோயின. கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி, மாவட்டங்கள், நகரங்கள் உள்ளே சென்று குடியேறினார்கள்.  பிள்ளைகளின் கல்விக்கும், அடிப்படை வசதிகளுக்கும்தானே அவர்கள் குடி பெயர்ந்தார்கள். நமது எல்லைகளும், எல்லையில் வாழ்ந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள். 
 
ஆனால் மறுபுறம், சீன தனது எல்லை கிராமங்களில் கட்டுமான பணிகளை செய்து புதிய எல்லை கிராமங்களையும் அமைத்தது. ஆனால் பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு  எல்லைகளில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. மக்களின் வசதிக்காக மலை தொடர்களில் பல சுரங்கபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜோஸிலா சுரங்கப்பாதை, காஷ்மீர் பள்ளத்தாக்கை, லடாக்குடன் இணைக்கிறது. ரோடங் பாஸ் கீழாக அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

முன்பெல்லாம் வருடத்தில் எட்டு மாதங்கள் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும். பனிக்காலங்களில் எல்லை கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கும். இப்போது நிலைமை அப்படி இல்லை. சேலா கணவாய் அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது. 14,000 அடி உள்ள இந்த கணவாய் மூடியே இருக்கும். இப்போது சுரங்க பாதை அமைத்து, உள்ளோம். இது போல பல சுரங்க பாதைகளை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நமது எல்லைகள் எப்போதும் தொடர்பு மையத்தில் உள்ளது.

நமது பிரதமர் மோடி மிகவும், அருமையான துடிப்புமிக்க  எல்லை கிராம திட்டம் அறிவித்து, மக்களுக்கு அனைத்து அடிப்படை வாதிகளையும் செய்து தந்துள்ளார். அதனால் கிராமங்களை காலி செய்த மக்கள் மீண்டும் அங்கேயே சென்று குடியேறுகிறார்கள்.  எல்லை கிராமங்களில் மீண்டும் மக்கள் நடமாட்டம் ஏற்பட்டுள்ளன. நமது எல்லை படையினர் இன்னும் உத்வேகத்துடன் எல்லையை பாதுகாக்கிறார்கள், காரணம் அவர்களது தொடர்பில் எப்போதும் அதிகார மையம் உள்ளது.. எல்லை கிராமங்களில் மக்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். தங்கள் வேர்களை விட்டு வெளியேறும் மனப்பான்மை அவர்களிடம் அறவே இல்லை.  இதுவரையில் நாம் அவர்களை புறக்கணித்து வந்துள்ளோம். எனவே நான் சொல்ல விரும்புவது, நமது எல்லைகள் முன்பைவிட இன்னும் வலுவாக பாதுகாக்கப்படுகின்றன.

எல்லைப்புற மக்களுக்காக பலவித முன்னேற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்தும் பூர்த்தியாகி விட்டது என்று சொல்ல மாட்டேன்.ஆனால் பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகின்றன. பிரம்மபுத்ரா குறுக்காக, போகிபில் ரயில் மற்றும் சாலை பாலம் கட்டப்பட்டது.  உலகத்திலேயே நீளமான ஆற்றுப்பாலமாக இது இருக்கிறது.  இருக்கும். இதன் மூலம் பொதுமக்கள் மட்டும் அல்ல, நமது ராணுவத்தினரும் எளிதாக எல்லையில் ரோந்து செய்யலாம். இந்தமாதிரி கட்டுமான பணிகளால், எல்லைப்புற மக்களுக்கு, பல வசதிகளை அளிக்க முடிந்தது.

இவையெல்லாம் மக்களுக்கு அருமையான பொது சொத்துக்களாக திகழ்கின்றன.எல்லைப்புற மக்களும் நம்மவர்கள். தலைநகரத

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிப்படை அறிவு வேணும்.. கூட இருக்கிறவங்களுக்கே ஒன்னும் செய்யல.. விஜயை விமர்சித்த ராஜகுமாரன்