Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

Advertiesment
அரசு

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (18:31 IST)
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்ய, தமிழக முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 
நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
 
மாணவர்களின் தேவையை கருத்தில்கொண்டு, இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 15,000க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பித்து, காலியாக உள்ள இடங்களில் சேரலாம்.
 
இந்த நீட்டிக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்தி மாணவர்கள் பயனடையுமாறு அமைச்சர் கோவி. செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்