Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

Advertiesment
திண்டிவனம்

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (16:21 IST)
திண்டிவனம் நகராட்சியில், பெண் கவுன்சிலர் ரம்யாவிடம் ஊழியர் முனியப்பன் மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, ரம்யா துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டிவனம் நகராட்சியின் 20வது வார்டு கவுன்சிலர் ரம்யாவிற்கும், நகராட்சி ஊழியர் முனியப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து, முனியப்பன் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், முனியப்பன் மன்னிப்பு கேட்பது போல தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் கவுன்சிலர் ரம்யா தற்போது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!