சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 55,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயா்ந்து 6,885 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயா்ந்து 55,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையான இன்று, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, 6960 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 55,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரியைக் குறைத்ததை அடுத்து, தங்கத்தின் விலை 3,000 ரூபாய் வரை குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படியிருக்க இந்த திடீர் விலையேற்றம் தங்கம் வாங்குபவர்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
சா்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதன் விளைவாகவே அதன் விலை ஏறியுள்ளதாகக் கூறப்படுகிறது.