Publish Date: Tue, 17 Sep 2024 (10:16 IST)
Updated Date: Tue, 17 Sep 2024 (10:17 IST)
தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்ததால் ஒரு சவரன் 55 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையான நிலையில் இன்று மீண்டும் இறங்கி உள்ளதாகவும் 55 ஆயிரத்திற்குள் ஒரு சவரன் நகை விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,865 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 54,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,320 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 97.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது