Publish Date: Thu, 19 Sep 2024 (09:56 IST)
Updated Date: Thu, 19 Sep 2024 (09:57 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்து உள்ளது தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியையும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது