Publish Date: Wed, 18 Sep 2024 (10:19 IST)
Updated Date: Thu, 19 Sep 2024 (09:56 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 54 ஆயிரத்திற்கும் கீழ் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,850 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 54800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழ் வரும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,305 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது