மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

Prasanth K
வியாழன், 6 நவம்பர் 2025 (10:11 IST)

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் தங்கம் இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.

 

சர்வதேச பொருளாதார காரணங்களால் கடந்த சில மாதங்களில் கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்த நிலையில், கடந்த மாதம் உச்சமாக சவரன் ரூ.98 ஆயிரத்தை நெருங்கியது. பின்னர் வேகமாக சரியத் தொடங்கி தற்போது ரூ.88 ஆயிரம் வரை ஏற்ற இறக்கங்களோடு விலை நீடித்து வருகிறது.

 

நேற்று 22 காரட் ஆபரண தங்கம் ரூ.89,440 ஆக விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.560 உயர்ந்து ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,250க்கு விற்பனையாகி வருகிறது. 24 காரட் தங்கம் சவரன் ரூ.98,184 ஆகவும், கிராம் ரூ.12,273க்கும் விற்பனையாகி வருகிறது.

 

வெள்ளியை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்த வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164 ஆக விற்பனையாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்.. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.. விஜய் குறித்து வைகோ

சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

வரதராஜ பெருமாள் கோவில் ‘தங்க பல்லி’ மாயம்? பரபரப்பு புகார்! - போலீஸ் விசாரணை!

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments