கடந்த சில நாட்களில் வேகமாக சரிந்த தங்கம் விலை தற்போது ஒரே விலை அளவில் சற்று ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.
உலகளாவிய பொருளாதார காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. கடந்த அக்டோபர் 21ம் தேதி வரை அதிகரித்த தங்கம் விலை மறுநாளே சரிவை சந்திக்கத் தொடங்கியது.
கடந்த சில நாட்கள் நிலவரப்படி அக்டோபர் 28 அன்று 22 காரட் ஆபரண தங்கம் சவரன் ரூ.90,600க்கு விற்பனையாகி வந்த நிலையில் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களில் ரூ.200 குறைந்து ரூ.90,400க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக கிராம் ரூ.165க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K