கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்றும் மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்தும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்தும் காணப்படுகிறது. இதே வேகத்தில் விலை உயர்வு தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 என்ற நிலையை தொட்டுவிடும் என்று கூறப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்து வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை குறித்த விவரங்கள் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,390
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,405
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,243
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,260
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,944
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,080
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.130.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.130,000.00