ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியானப் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆண்டு ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ப்ரோகோட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, அரவிந்த் அசோகன், ஸ்ரீநிதி ஷெட்டி, ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. திருமணம் ஆன ரவி, எஸ் ஜே சூர்யா மற்றும் அரவிந்த் ஆகியோர் மனைவிகளுக்கு முன்னால் கண்ணியமானவர்களாக நடிக்க, அவர்களுக்குப் பின்னால் செய்யும் தில்லுமுல்லுகளை நகைச்சுவையாக சொல்லி செல்கிறது அந்த டீசர். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் 2026 ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.