தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்துள்ளது.
அதுமுதல் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் அனைத்துப் பெண்களுக்கும் நகர்ப்புறப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.