திருவிழா நடைபெறும் நாட்களில் 10 கோவில்களில் முற்றிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்ற போது, அமைச்சர் சேகர்பாபு புதிய சில அறிவிப்புகளை வெளியிட்டுவார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், முதல் கட்டமாக 10 கோயில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாத பௌர்ணமி, பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாள் ஆகிய நாட்களில் கட்டண தரிசனம் ரத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருநாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.