சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் 110 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்த பல மாணவர்கள் இன்று உலகின் பல நிறுவனங்களில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நபர்களாக உள்ளனர் என்பதும் பலர் சொந்த நிறுவனம் நடத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே..
இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அவ்வப்போது சென்னை ஐஐடி நிறுவனத்திற்கு நன்கொடை அளித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்குவதற்கு 110 கோடி ரூபாய் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி என்பவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த மாணவர் சென்னை ஐஐடியில் படித்து தற்போது மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடிக்கு இவ்வளவு பெரிய தொகை முன்னாள் மாணவர் ஒருவர் இதற்கு முன் வழங்காத நிலையில் இதுவே முதன்முறை என ஐஐடி இயக்குனர் காமகோடி பெருமிதம் கொண்டுள்ளார்.