ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, உரையாற்றினார்.அதில், தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு காத்திருக்கிறது என்று ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பேசியதாவது:
மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான டாடா, ஹூண்டாய், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வரவேண்டும்.
மின்சார வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் கருவிகள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும், தகவல் தொழில் நுட்பம், புதுப்பிக்கத்தக்க சரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட துறைகளிலும், இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ் நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.