அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்களுக்கு மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அந்த பதில் மனு தாக்கலுக்கு பின்னரே செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.