Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான கட்டணம் திடீர் உயர்வு!.. ஓட்டு போட சொந்த ஊருக்கு போறவங்க ஷாக்!..

Advertiesment
flight
பொதுவாக நீண்ட நாட்கள் தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்து, அரசு பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.  எனவே வெளிநாடுகளில் இருந்து பலரும் ஓட்டு போடுவதற்காக தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒருபக்கம் சென்னையில் வசிக்கும் பல ஊர்களை சேர்ந்தவர்களும் நாளை வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையிலிருந்து பல இடங்களுக்கும் செல்லும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல விமான கட்டணம் 17,527 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 13,320 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்ல 29, 397 ரூபாயாக டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இதனால் பலரும் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்தை நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்க் ஜுக்கர்பெர்க் போலவே AI குளோன்.. அவரை போலவே சிந்திக்குமாம்?